8 வருட கனவு..! உதவி கரம் நீட்டிய பாலா..! நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி..!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான கலக்க போவது யாரு நிகச்சியில் பங்கேற்பாளராக சேர்ந்து பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி ஷோ மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் “பாலா”…
பின் அதில் வரும் பணத்தை மக்களுக்கு கொடுத்து.., உதவிகள் செய்து வந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து “மாற்றம்” மூலம் இன்னும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்..
அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேமா. மாற்றுத்திறனாளியான இவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் பலமுறை
அரசு சமூக நலத்துறையில் கடந்த 8 வருடங்களாக மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்தும் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர் வேலைக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்துள்ளார்.
இதனால் மிகுந்த வேதனையில் இருந்த பிரேமா, ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த சின்னத்திரை நடிகர் பாலாவை “உணர்வுகள்” அமைப்பின் மூலம் சந்தித்து வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
அதையடுத்து, அப்பெண்ணின் மனுவை பெற்றுக் கொண்ட பாலா நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார். பின்னர், அப்பெண்ணும் வீட்டிற்குச் சென்று விட்டார். இதற்கிடையில், நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் 50 ஆயிரம் நிதி கொடுத்து, மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.
பின்னர், நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு, KPY பாலா பிரேமா வீட்டிற்கு நேரடியாகச் சென்று வாகனத்தை வழங்கியுள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பாலா, “அரசுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை, என்னிடம் இருந்தால் உதவி செய்வேன். இல்லையா பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கான முயற்சிகளை எடுப்பேன். முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல முறையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது” என்றார்.
இது குறித்து பிரேமா கூறுகையில், “44 வயது காரணமாக பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவும் வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில், பாலாவின் பெரும் உதவி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக” தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ