திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பா?

மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்புகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கி தமிழகம் உட்பட பல்வேறு தென்னிந்திய மாநிலங்களிலும் திரையரங்குகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு மார்ச் 31ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் அனைத்து திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் ரூபாய் 8000 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருவாயில் 1000 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரியவந்துள்ளது.

What do you think?

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடி கைது!

1,052 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் – நிர்மலா சீதாராமன்