80களின் நாயகி… நடிப்பு ராட்சசி ராதிகா சரத்குமார்… பிறந்த நாள்..!
தமிழ் சினிமாவில் 80களின் காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் ஒருவர் நடிகை ராதிகா. மூத்த மன்னனி நடிகரான எம்.ஆர்.ராதா அவர்களின் மகளான இவர் ப்பாரதி ராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர்.
பிறப்பால் திரைக்குடும்பத்தை சேர்ந்துள்ள இவர், தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார்.
விருதும் பட்டமும்:
பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவரின் பிரபலத்தை கண்டு இந்திய அரசு மற்றும் திரைத்துறை சார்ந்த இயங்கும் பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளது.
2019-ஆம் ஆண்டு மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் நடித்து வந்துள்ள இவர், அந்த படத்தின் பாராட்டு விழாவில் இவரை கௌரவவித்து இவருக்கு திரையுலகின் “நடிகவேள் செல்வி” என்ற பட்டத்தினை வழங்கியுள்ளனர் படக்குழுவினர்.
சின்னதிரை:
வெள்ளிதிரையில் புகழின் உச்சியில் இருக்கும் போதே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க களம் இறங்கினார். அதன்படி அவர் தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய பெண், மறுபிறவி, மீண்டும் மீண்டும் நான், சித்தி, ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த சித்தி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து சித்தி 2விலும் நடித்தார்.
திருமண வாழ்க்கை:
இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
44ஆண்டுகளை கடந்தும்…
1980களின் ஆரம்ப கட்டத்தில் நடிக்கத் தொடங்கிய ராதிகா இன்று வரை நிற்காமல் கிட்டத்தட்ட 42 வருடங்களைத் தாண்டி தொடர்ந்து சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக்கொண்டு வருகிறார்.
கதாநாயகி, குணச்சித்திர கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரம் என எந்த ஒரு வேடமாக இருந்தாலும் அதில் பின்னி பெடலெடுக்கும் நடிகை என்றால் அது ராதிகா சரத்குமார் என்றே சொல்லாம்.
பிறந்த நாள்:
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ரியாலிட்டி ஷோ என எதுவாக இருந்தாலும் சரி அதில் மக்களை ரசிக்க வைக்க கவனம் செலுத்துவதில் தவறியதில்லை. இவ்வாறு திரையுலகில் நடிப்பு ராட்சசியாக விளங்கிவரும் நடிகை ராதிகா இன்று தனது 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்