கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்த 9 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆக.6 ஆம் தேதி 9 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
கைது செய்த 9 மீனவர்களை திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு ஆக.26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.