“96 பட பாணியில் ரீயூனியன் வந்த 1988 மாணவர்கள்” செய்த செயல் உறைந்த தற்போதைய மாணவர்கள்..!!
வெயிலோடு விளையாடி கோவில்பட்டி அருகே 31 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்டு முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள். நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு நவீன கழிப்பறை கட்டிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த போது சாப்பிட்ட தின்பண்டங்களை காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைத்த முன்னாள் மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988 – 1993 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் நம்ம ஊர் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ரூ நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை முன்னாள் மாணவர் ரவி வரவேற்றார்.
காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை உரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்துகொண்டு புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பாராட்டி கௌரவித்தனர். விழாவின் இறுதியில் முன்னாள் மாணவி கௌரி நன்றி உரை கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற போது தாங்கள் சாப்பிட்ட பின்பு பண்டங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இன்றைய தலைமுறையினர் அதனை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தனர். அதுமட்டுமின்றி 31 ஆண்டுகள் கழித்து தங்களது நண்பர்களை பார்த்த முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து குழு படமும் எடுத்துக் கொண்டனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..