மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஆலயம் புதுப்பிக்கும் பணி தீவிரம்..!
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தீவிரம். 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற இக்கோயில் பண்டைய கால முறைப்படி சுண்ணாம்பு கடுக்காய் சேர்த்து ஆலயம் புதுப்பிக்கும் பணி, பொதுமக்கள் வெகுதிரலாக கலந்து கொள்ள திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு அழைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்களால் பாடல் பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும்.
அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த இந்த ஆலயம் காசிக்கு நிகரான ஆறு ஆலயங்களில் ஒன்றாகும். 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற ஆலயத்தின் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் சுண்ணாம்பு வெல்லம் கடுக்காய் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமாக 123 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்படுகிறது. மேலும் ஆலயத்தின் தீர்த்த குளமான பிரம்ம தீர்த்தத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆலயத்தின் உள்ளே பெய்யும் மழைநீர் அனைத்தும் கோயில் தீர்த்த குலமான பிரம்ம தீர்த்தத்திற்கு சென்று சேரும் வகையில் மழைநீர் சேகரிப்புடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் குறித்து திருவாவடுதுறை ஆதினம் 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் 27ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் மத்திய மாநில அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் நீதிபதிகள் பல்வேறு மடாதிபதிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளதாகவும் பக்தர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..