வழியில் சென்ற இளைஞரிடம் இந்த வழி எங்கு செல்கிறது என இந்திய கிரிக்கெட் மேதை தோனி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் முடிந்த பிறகு சென்னை கேப்டன் தோனிக்கு காலில் ஏற்பட்ட இன்சுரி காரணமாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். இந்நிலையில் அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு சிறுசிறு உடற்பயிற்சிகளுடன் ஓய்வு எடுத்து வரும் தோனி, அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து காரில் ஜாலியாக ஊரையும் சுற்றி வருகிறார்.
அந்த வகையில், தோனி ராஞ்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு நின்றிருந்த இளைஞர்களிடம், ‘இந்த வழி எங்கே இருக்கிறது’ என்று கேட்ட சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆச்சர்யத்தில் திளைத்த அந்த இளைஞர்களும் தோனிக்கு சரியான வழியைச் சொல்லி அனுப்புகிறார்கள். பின்னர், அந்த இளைஞர்களுக்கு கை கொடுத்த தோனி அவர்களுடன் காரில் இருந்தபடியே போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோதான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
This man is so simple and this simplicity is what makes him different from every other celebrity #MSDhoni #Dhoni pic.twitter.com/ErMlX3KGVX
— TAAGASTYA (@LalPatrakar) August 11, 2023