சுதந்திரநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், கனமழை எச்சரிக்கை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேநீர் விருந்து நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ் பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: