ஆளுநர் இதயம் கரையாது..! மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர்..!!
சென்னை குரோம்பேட்டையில் 2 முறை நீட் தேர்வு எழுதி.., 2 முறையும் தோல்வி அடைந்த காரணத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.., மகனின் இழப்பை தாங்க முடியாததால்., மகனின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை கேட்டு வேதனை அடைந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.., எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டாலும்.., ஆளுநரின் இதயம் கரையாது.., மாணவர்களின் உயிரை நினைத்து அவர் வருத்தப்பட போவதும் இல்லை எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுங்கள்.., என மற்ற மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஒரு முறையல்ல இருமுறை நாங்கள்.., நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தர கோரி மனு அளித்தோம். முதல் முறை மனு கொடுத்த பொழுது பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது என அதை திருப்பி அனுப்பினார்.
இரண்டாவது முறை அனுப்பியபோது குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டேன் என விளக்கம் கொடுத்தார். ஆனால் அந்த மசோதா இன்னும் ஆளுநரிடம் தான் இருக்கிறது. யார் உயிர் போனால் எனக்கு என்ன.., என்ற எண்ணம் ஆளுநரின் மனதில் இருக்கிறது.
எத்தனை மாணவர்களின் உயிர் பலியானாலும்.., ஆளுநர் போன்றவர்களின் இதயம் கரைய போவதில் எனவே மாணவர்கள் தற்கொலை எனும் தவறான பாதையில் செல்ல வேண்டாம்.., நீட் என்ற மதில் சுவரை திமுக கட்டாயம் உடைத்து விடும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..