இறுதிக்கட்டத்தில் சந்திராயன் -3.. நிலவில் தரையிறங்க இருக்கும் விக்ரம் லேண்டர்.
சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரை தனியே பிரித்து நிலவில் தரை இறக்குவதற்காக.., மிகவும் சவாலான தொழில் நுட்ப செயல்பாட்டை இஸ்ரோ இன்று மதியம் மேற்கொள்ள உள்ளது.

சந்திராயன் 3 விண்கலம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுவது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. இஸ்ரோ நினைத்தபடி புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு சந்திராயன் 3 சென்று விட்டது.
சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து வரும் விக்ரம் லேண்டர் தனியே பிரிந்து நிலவிற்கு செல்லும்.., அதற்கான வேலை இன்று மதியம் தொடங்கி விடும். எனவே இஸ்ரோ திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி விடும்,.
மேலும் உந்து கலனில் இருந்து விக்ரம் லேண்டரை பிரித்த பிறகே, சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சந்திரயான் -3 திட்டமிட்டப்படி செல்லும் நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகம் அடையும் என மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.