புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பல்வேறு வலியுறுத்தலின்படி யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரி மாநிலமாக மாற்ற ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது என்றும், நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் எனக்கூறிய ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் துரோகி; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எதிரி எனவும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.