பக்தர்களின் துயர் நீக்கும் பச்சையம்மன்..! இந்த நாளில் வழிபாட்டால் வரம் கிடைக்கும்..!
சிவபெருமானின் மிக பெரிய பக்தனாக இருந்த பிருங்கி முனிவர்.., சிவபெருமானை மட்டும் வணங்கி வந்துள்ளார்.., சிவனை மட்டும் வணங்கி பார்வதி தேவியை அவமதித்துள்ளார்.
பிருங்கி முனிவர் தேனீ ரூபம் எடுத்து.., சிவனை சுற்றிவந்துள்ளார். கோபமடைந்த பார்வதி தேவி.., சிவனின் ஒரு பாதியாக வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் சிவ பெருமான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின் மறுநாள் பார்வதி தேவி பூலோகம் சென்று.., அடர்ந்த இருக்கும் வாழை மரத்தின் அடியில் லிங்கம் ஒன்றை உருவாக்கி சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்துள்ளார்.
அப்பொழுது அந்த தவத்தை கலைப்பதற்காக இரண்டு அரகர்கள்.., வந்தனர். இதை பார்த்த சிவபெருமான்.., முனி அவதாரம் எடுத்து இரண்டு அரகர்களை அழித்தார்.
ஒரு நாள் சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யவதற்கு தண்ணீர் இல்லாமல் போய் விட.., பார்வதி தேவி அவர்களின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகரை அழைத்து தண்ணீர் கொண்டு வர சொல்ல,
விநாயகர் அங்கு தவம் புரிந்து கொண்டிருந்த முனிவரின் நீரை தட்டி விட்டுள்ளார், முருகர் அவரின் வேல் வைத்து மலையின் ஒரு பகுதியை உடைத்து ஒரு அருவியை உருவாக்கினார்.
தண்ணீர் வருவதற்கு நேரமானதால் பார்வதி தேவியே லிங்கத்தின் கீழ் ஒரு ஊற்றை உருவாக்கினார். இந்த மூன்று நதியும் சேரும் இடத்தை முக்கூடல் என அழைப்பார்கள்.
இதை பார்த்த சிவபெருமான்.., மனம் இறங்கி பார்வதி தேவியை தன்னுடன் ஒரு பாதியாக சேர அனுமதித்தார்.., அப்படி உருவானவர் தான் “அர்த்தநாதிஸ்வரர்”.., பார்வதி தேவியின் கடும் தவத்தை உணர்ந்த பிருங்கி முனிவர் பார்வதி அம்மனையும் வணங்க ஆராமித்தார்.
ஆனால் தண்ணீர் வருவதற்கு நேரம் ஆனதால் பார்வதி அம்மனின் முகம் முழுவதும் கோபத்தால் சிவந்துள்ளது, இதை பார்த்த விநாயகர் மற்றும் முருகர்.., அம்மாவின் கோபத்தை தனிப்பதற்காக அங்கிருந்த தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்.
அபிஷேகம் செய்ய…, செய்ய அவரின் கோபம் குறைந்து.., உடல் முழுவதும் பச்சை நிறமாக மாறி “பச்சையம்மன்” என அழைக்கப்பட்டார்.
பச்சையம்மன் கோவிலுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமை அன்று சென்று வழிபட்டால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும். அதிலும் அங்கு தரும் பச்சை குங்குமம் இன்னும் பிரசித்தி பெற்றது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..