மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சங்கடங்கள் தீரும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதர வழி உறவுகளால் ஆதாயம் இருக்கும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். உங்கள் பேச்சுத் திறமையால் தன லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். கலைத் தொழிலில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள். நண்பர்களின் ஆதரவு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனக்கவலைகள் தீரும். பெற்றோர்களின் ஆசிகள் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் வருமானம் பெறுவார்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வாராத கடன் தொகை வந்து சேரும். உங்கள் திறமையால் புகழையும், செல்வத்தையும் ஈட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். அரசு காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருப்திகரமான பொருள் வரவு இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதிய மனிதர்கள் உதவுவார்கள். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கும். வெளியூர் பயணங்களினால் லாபம் ஏற்படும். சராசரியான பொருள் வரவு இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு மனோ தைரியம் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்கள் வழியில் தனலாபம் ஏற்படும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். மகான்களின் ஆசி கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்ததை காட்டிலும் லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மன திருப்தி உண்டாகும். தாராளமான பண வரவு இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். சுப காரியம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சவாலானதாக இருக்கும். பண விவகாரங்களில் புதியவர்களை நம்ப வேண்டாம். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சக பணியாளர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களால் தன வரவு இருக்கும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் பெறுவார்கள். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் மனதில் இனம் புரியாத பதட்டம் இருக்கும். சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்புவதில் தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற போராட வேண்டி இருக்கும்.