அனைத்து எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக தான் உள்ளோம் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு அதிகாரியிடம் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும்,
போக்குவரத்து துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அதிகாரியிடம் தேவைகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு
பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒப்பந்தக்காரர்கள், தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டேன். வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
மின்சாரத்துறை போக்குவரத்து துறை தீயணைப்பு துறை ஆகியவைளுக்கான இடம் கேட்டுள்ளனர். அதற்காக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஜுயபுரம் செல்லும் பைபாஸ் சாலை பணிகளும் விரைவில் டெண்டர் விடப்படும்.
பாராளுமன்றத் தேர்தல் எப்போது வரும் என தெரியாது. நாங்கள் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிப்பதற்கான பணிகளை நிறைவு படுத்தி வருகிறோம். மத்திய பேருந்து நிலையம் மற்றும் சிந்தாமணி பேருந்து நிலையம் ஆகியவை போக்குவரத்து செயல்படும் அவற்றை மேம்படுத்தப்படும். மேலும் வணிக வளாகங்கள் கட்டி மாநகராட்சிக்கான வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு 500 ஏக்கர் உள்ளது. இதன் 100 ஏக்கர் பேருந்து நிலையத்திற்கு உள்ளது. 10 ஏக்கர் ஐடி பார்க்குக்கும், 20 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும் வழங்க உள்ளோம்.
மேலும் தீயணைப்பு துறை, காவல் துறை, மின்சார துறைக்கும் நிலங்கள் வழங்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில்வே பணிகள் திருச்சி, சேலம் ஆகியவைக்கு ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டது விரைவில் வந்துவிடும்.
பாதாள சாக்கடைக்காக விடுபட்ட இடங்களுக்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து விடும். மேலும் குடி தண்ணீருக்காகவும் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சமயபுரம், மாந்துறை, வயலூர் ஆகிய பகுதி வரை விரிவாகத்துக்கு ஏதுவாக குடி தண்ணீர், பாதாள சாக்கடை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது.
எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு
அதெல்லாம் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அவர்களிடமே கேளுங்கள் எப்படி எங்களை சுத்திவிட வேண்டும் என்று இருக்கிறீர்கள் நல்லதா கெட்டதா போடுங்கள் என நகைச்சுவையாக கூறிவிட்டு கடந்து சென்றார். ஆய்வு பணியின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.