மனதை வதைக்கும் மதுரை ரயில் தீவிபத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்..!!
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிர் இழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை போடி ரயில் தடத்தில் ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில் நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்தது..,
காலை 5:30 மணிக்கு சுற்றுலா பயணி சிலிண்டர் வைத்து டீ போட முயன்று உள்ளார் அப்பொழுது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு கேஸ் வெடித்துள்ளது. அந்த சமையத்தில் பெட்டியில் இருந்த 90 பேர் உயிர் தப்பியுள்ளனர். உடனடினயாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர்.., நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.
இந்த மனதை வருடும் தீ விபத்து தகவலை கேட்ட, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ரயில் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வருகை தந்து மரணத்தை தழுவிய பயணிகளின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல் எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..