சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்கு பின், நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி, பிரக்யான் ரோவர் நிலவில் நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடியாக அறிவித்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்த நிலையில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர்.2-ல் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.