காவல் உதவி ஆய்வாளர் தேர்வு தொடக்கம்..!!
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு ஆறு மையங்களில் 6401 பேர் தேர்வு எழுதுகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தலைமையில் பாதுகாப்பு பணியில் 615 காவலர்கள்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுக்க இன்று காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கலைஞர் அரசு கலைக் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கலைக்கல்லூரி, கனகாம்பாள் பள்ளி, கரண் கலைக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி, சிஷ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி உட்பட 6 மையங்களில் 4930 ஆண்களும் 1471 பெண்களும் என 6401 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
காலை 8:30 மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்கு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். காலையில் 10 மணி முதல் 12:30 வரை பொது அறிவு தேர்வு, தொடர்ந்து மாலை 3 மணி முதல் 05:10 மணி வரை தமிழ் தகுதி தேர்வு என்ற அடிப்படையில் இரு வேளையும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்யபிரியா தலைமையில் 615 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..