ADVERTISEMENT
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சயின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.
தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்சு புத்திரன், சஞ்சயை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும், இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார்.
இந்த நிலையில், சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில்(எக்ஸ்) பகிர்ந்துள்ளது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.