விஷமாக மாறிய குடிநீர்..! இது வரை 16 மாணவர்கள்..!!
இராமநாதபுரம் மாவாட்டம், பரமக்குடி அருகே மீன்வங்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகே ஒரு குடிநீர் தொட்டி அமைந்துள்ளது.
நீண்ட காலமாக இருக்கும் இந்த தொட்டியில் அங்கிருக்கும் மாணவ மற்றும் மாணவிகள் உபயோகித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி செல்லும் முன் அந்த தொட்டியில் உள்ள குடி தண்ணீரை குடித்து விட்டு சென்றுள்ளனர்.
வகுப்புகள் தொடங்கிய பின் 16 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின் ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குடித்த தண்ணீரில் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
பின் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மருத்துவரிடம் விசாரித்து விட்டு அந்த தண்ணீரை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தண்ணீரே விஷமாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..