ஆதித்யா எல்-1 வெற்றியடைய ஊத்தங்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு யாகம நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர்ரில் அக்னி தாய்
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஜென்ம நட்சத்திரம் (பூரட்டாதி திரு நட்சத்திரம்) ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 2 மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு யாக வேள்வி புண்ணியகம் அபிஷேகம் நடைபெற்றது பிறகு மகா தீபாரதனை அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் , இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L.1 புதிய விண்கலம் ஒன்றை ஏவுகிரது. இந்த விண்கலம் “அத்ரி” என்று அழைக்கப்படுகிறது. ஆதித்யாL.1 விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நுழைந்து, அதன் மேற்பரப்பு, அதன் காற்று மற்றும் அதன் காந்தப்புலத்தை ஆய்வு செய்யும்.
ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனை சென்றடைய வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள துரோபதி அம்மன் தர்மராஜா கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனை சென்றடையவும், அதன் ஆய்வுகள் வெற்றிபெறவும் பிரார்த்தனை செய்தனர். ஆதித்யா L1 விண்கலத்தின் வெற்றிக்கு துரோபதி அம்மன் மற்றும் தர்மராஜா சாமிகள் அருள் புரிவர்கள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த பூஜையில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.