பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்-1 விண்கலம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைவரின் முன்பும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசினார். அப்போது பேசியதாவது,
“சரியாக திட்டமிட்டபடி 648 கிலோ மீட்டர் உயரத்தில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா விண்கலம். சுமார் 2,298 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, ஆதித்யா விண்கலமானது தனித்தே தனது பயணத்தைத் தொடர்கிறது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், சரியான பாதையில் செல்கிறது. திட்டமிட்டபடி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இனி, விண்கலன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்கள் மிக நீண்ட பயணம். திட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். ” இவ்வாறு தெரிவித்தார்.