போட்டிக்கு மாணவர்கள் தயாரா..? மாணவர்களுக்கு அழைப்பு கொடுத்து இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் “கலைஞர் 100” என்ற “வினாடி வினா” போட்டிக்கு இப்போதில் இருந்தே மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு கொடுத்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, முன் கலைஞர் 100 வினாடி வினா, இணையத்தின் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் வருகிற 15ம் தேதி தொடங்க இருக்கிறது, செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி தொடர்ந்து 75 நாட்களுக்கு நடைபெறும்.
இணையத்தளத்தில் 45 நாட்களும், நேரடி யாக 30 நாட்களும் நடைபெற இருக்கிறது. வயது வரம்பு வாரியாக இந்த போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
வருகிற செப்டம்பர் 14ம் தேதிக்குள் கலைஞர் வினா விடைக்கு தங்களை தயார் செய்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக 10,000 ஆயிரம் கேள்விகள் உள்ளன 18 வயதிற்கு உட்பட்டவர்கள், மற்றும் மேற்பட்டவர்கள் என இரு பிரிவினராக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் விளையாட kalaignar100.co.in என்ற இணையதளத்தில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி அன்று இணையலாம், Kalaignar100quiz வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே மாணவர்கள் தயாராகுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..