தோசைக்கல்லால் சண்டை போட்டு கொண்ட இரு பெண்கள்.. மருத்துவமனையில் அனுமதி..?
நெல்லை வண்ணாரப்பேட்டையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தோசை கல்லால் தாக்கி கொண்ட இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மகேஷ் என்ற பெண் , அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதற்காக வாரந்தோறும் வட்டி பணத்தை சுப்புலட்சுமி வசூல் செய்துள்ளார்.
வட்டியுடன் அசலை கட்டிய பின்னரும் சுப்புலட்சுமி, மகேஷ் இல்லத்தில் புகுந்து வட்டிக்கு பதிலாக உன் மகளை எனக்கு கொடு என கூறியதாக சொல்லபடுகிறது. அந்த வார்த்தையை கேட்டு ஆத்திரமடைந்த மகேஷ் தோசைக்கல்லால் தாக்க, பதிலுக்கு சுப்புலட்சுமியும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இரு பெண்கள் தோசை கல்லால் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..