“என் தலையை சீவ 10கோடி வேணாம்.., 10 சீப்பு போதும்..” சாமியாருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி..!!
சென்னை நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் உயிருக்கு உத்திர பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி மடத்தில் உள்ள சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தி கிழித்து.., தீயால் எரித்து அவரின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார்.
In UP's Ayodhya, sant Paramhans Acharya conducted a symbolic "behe@ding" using a sword and lit the poster of DMK leader Udhayanidhi Stalin for latter's remark on "Sanatan Dharma". Acharya also announced about ₹ 10 cr on Stalin's head. pic.twitter.com/jImlSKwGnt
— Piyush Rai (@Benarasiyaa) September 4, 2023
“சனாதனத்தை ஒழிப்போம்” என பேசிய அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி வழங்கப்படும் என பரஹம்சா சாமியார் ஆச்சரியர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். என பேசினார், ஆனால் அவர் பேசியதை அப்படியே மாற்றி பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசி” நோயை விட அதி வேகமாக பரப்பி கொண்டு இருக்கிறது, (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. இதற்கு முன் பெண்கள் படிக்க கூடாது, மேலாடை அணியக் கூடாது, கோயிலுக்கு செல்லக்கூடாது என சொன்னார்கள். அதையெல்லாம் நாங்கள் மாற்றவில்லையா. நான் சனாதனம் குறித்து இன்னும் பேசுவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு இன்னும் ஓயாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா கூறியிருந்த அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி “தலையை சீவுவதற்கு எதற்கு பத்து லட்சம்..? பத்து சீப்பு இருந்தால் போதுமே..! என பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..