மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் நாங்கள் ஒன்றுப்படுகின்றோம் மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கின்றனர் அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்- கே.எஸ்.அழகிரி
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து திக,திமுக , விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது:
இந்தியாவில் பிற மாநிலங்களை விட தனிச்சிறப்பு உடையது தமிழ்நாடு. அதனால்தான் விஸ்கர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நம்மிடையே பல்வேறு பழக்க வழக்கம் இருக்கலாம் ஆனாலும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றோம். இந்த தேசத்தின் அனைத்து கட்சிகளும் மனித நேயத்தை நேசிப்பவர்கள் தான். ஆனால் ஆர் எஸ் எஸ் மனித நேயத்திற்கு எதிரானவர்கள்.
இந்த ஒன்பது ஆண்டு ஆட்சியில் பா ஜ க அவர்கள் நினைத்ததை நடத்திக்காட்டி வருகின்றனர். மாநிலமாக இருந்த காஷ்மிரை மூன்றாக பிரித்தார்கள் அதுதான் அவர்கள் கொள்கை. நாம் நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்து சொல்வதில் நமக்கு தயக்கம் இருக்க கூடாது. நமது பாரம்பரியம் மதசார்பின்மை பாரம்பரியம் இதை சொன்னால் நாம் இந்துக்களுக்கு எதிராக பேசுகின்றோம் என பா ஜ கவினர் சொல்கின்றனர்.
மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது எப்படி இந்துக்களுக்கு எதிரானதாகும்.இந்தியா கூட்டணியைப் பார்த்து பா ஜ க அஞ்சுகின்றது இதானால் தான் இந்தியா என்ற பெயரையே பாரதம் என மாற்ற முயற்சிக்கின்றனர். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் நாங்கள் ஒன்றுப்படுகின்றோம். மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைக்கின்றனர் அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்