அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, ‘சமூக ஊடக சிறப்பு மையம்’ அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்தார்.
அப்போது பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட, ‘சமூக ஊடக சிறப்பு மையம்’ அமைக்கப்படும்.
இம்மதிப்பீடுகளில் காவல் துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தீ விபத்துகளைத் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.