வேலையற்றவர்களுக்கு இது போன்ற வீண் விவாதங்களுக்கு பதில் சொல்லி எந்நேரத்து வீணாக்க முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்கள் குறித்து இரண்டாம் பாகம் புத்தக வெளியிட்டு விழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அப்பொழுது அவர் பேசுகையில்,
திருக்கோயில் சொத்துக்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது 7. 5.2021 முதல் 31.3 22வரை முதல் கட்டமாக 167 திருக்கோவில்களில் 2500.64 கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்பட்டதாகவும் இரண்டாவது கட்டமாக 1.4.22 முதல் 31.3.23 வரை 330 திருக்கோவில்களில் 1693.29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் 3383 எக்கர் நிலம் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான இரண்டாவது கட்ட புத்தகத்தை தற்போது வெளியிட்டு இருப்பதாகவும் 7.5.23 முதல் 7 9 2029 வரை 653 திருக்கோயிலுக்கு சொந்தமான 5121 கோடி மதிப்பிலான 5721 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதற்கான புத்தகங்கள் வெளியிடப்படும் எனவும் நவீன தொழில்நுட்பக் கருவியான ஜிபிஆர்எஸ் மூலம் ஒரு லட்சத்து 46,958.2 ஏக்கர் இடங்கள் ரேபர் கருவி வாயிலாக அளவீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்து துறைய பொறுத்த வரைக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் எங்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும் அதனை அகற்றப்படும் எனவும் அதற்கான பணி தொடர்ந்து நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்திற்கு வாடகை வசூலிப்பது அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது வரை 5121 கோடி ரூபாய் மதிப்பில்லான 5721.19 எக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக ரேபர் கருவி வாயிலாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 958.2 எக்கர் இடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் அதில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடம் என்று கல் பதிக்கப்பட்டு இருப்பதாகவும்
ஆக்கிரமிப்பு என்று தெரிந்தவுடன் உடனடியாக அவர் அப்புறப்படுத்த முயற்சி சட்டத்தில் இடம் இல்லை தொடர்ந்து அவருக்கு பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டு நீதிமன்ற வழக்குகள் சென்ற பிறகுதான் அந்த இடத்தை கையகப்படுத்தப்படுவதாகவும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு வாடகைக்கு விட்டும் ஏலத்தில் விட்டும் அதன் மூலம் வரக்கூடிய வருவாய் என கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் எண்ணம் இந்து சமய அறநிலையத்துறைக்கு இல்லை.
இதேபோன்றுதான் திருக்கோயில்களுக்கு உண்டிகளில் வரும் காணிக்கை தங்கத்தினை உருக்கி அதனை தங்க பத்திரத்தில் முதலீட்டு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் ஆண்டுக்கு இரண்டு கோடியே 25 லட்ச ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் தற்போது வரை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் மாங்காடு கோவில் பெரியபாளையத்தம்மன் கோவில் திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் தங்க ஆபரணங்கள் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆன்மிகத்தை வைத்து தமிழக மண்ணில் ஆட்சி செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்த்ததாகவும் அந்த நினைப்பு அவர்களுக்கு கை கொடுக்கவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தப்பட்டு இருப்பதாகவும் மாமல்லபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெற இருப்பதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் புது புதுத் திட்டங்களை தொடர்ந்து கொண்டு வருவதாகவும்
இதுவரை 7,326 கோயில்களுக்கு திருப்பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இருப்பதாகவும் இதுவரையில் இது போன்ற அதிகமாக திருப்பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது இல்லை எனவும் ஆன்மீகத்தில் ஒரு புரட்சி செய்து வருவதாகவும் 200 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தும் நூறு கோடி உபயோதாரர்கள் அளித்து 300 கோடிகளில் தொடர்ந்து திருப்பணி நடைபெற்று வருவதாகவும் வலதுசாரிகள் தொடர்ந்து எங்களின் மீது வீணாக குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும்
பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான பதவி பிரமாணம் தான் ரகசிய காப்பு பிரமாணம் தான் இந்து சமய அறநிலை துறைக்கு தனியாக எதுவும் இல்லை எனவும் எந்த வகையில் அரசியல் சாசன சட்டத்தை மீறவில்லை எனவும் BJP B பேக் ப்ளூ J என்ற ஜாயிண்ட் ப் பிளேட்கன் என்று கூறலாம் எனவும் அண்ணாமலை அவர் பெயரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்க முடியும் எனவும் வேலையற்றவர்களுக்கு இது போன்ற வீண் விவாதங்களுக்கு பதில் சொல்லி எந்நேரத்து வீணாக்க முடியாது எனவும் பெண்களுக்கு எதிரான சமூகநீதி இதான் ஒழிக்க வேண்டும் என்று கூறியும் தவிர மற்றவை நாங்கள் ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்