10 Total Views , 1 Views Today
சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.19) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நேற்று(மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று(மார்ச்.19) அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசு சார்பில் வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று(மார்ச்.19) இரண்டாவது முறையாக தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த வேளாண் பட்ஜெட்டில் பல புதிய சலுகைகளும், அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.