மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி எப்போதான் தொடங்கும்..? நீதிமன்றத்தில் கோரிக்கை..!
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர குமார் வர்மா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுரை தோப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று ஒன்றிய அரசு கடந்த 2015 பிப்ரவரி 28- ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதை குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்க உள்ள நிலையில், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசால் மேற்கொள்ள முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சூழலில் மக்கள் மனதில் எழுந்துள்ள குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..