தேர்வுகள் இனி இப்படி தான் இருக்கும் மாணவர்களே உஷார்..!!
காலாண்டு தேர்வை பொதுத் தேர்வு போல் நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுள்ளது.
6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி முடிவடைகிறது.
ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது.
இதையொட்டி, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், exam.tnschoolsgov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வுக்கு முதல்நாள் மதியம் 2 மணிக்கு மேல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகளோ சிக்கலோ இருந்தால் 14417 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..