அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை..!! உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தான் என்ன..?
அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதை தொடா்ந்து இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாற்றப்பட்டது.
இதனிடையே, செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு என தெரிவித்தது.
மேலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்கை விசாரிக்க முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.
உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.அல்லி முன் செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் அருண் முறையிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி அல்லி ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தவுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..