கள்ளக்குறிச்சியில் சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் கொதிக்கும் சாலையில் அமர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்…
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கள்ளக்குறிச்சி நான்குமுனைச் சந்திப்பில், சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் கொதிக்கும் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியச் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாவு உள்ளிட்டோர் மக்கள் விரோத பாஜக அரசே, ஆட்சியை விட்டு வெளியேறு என்று முழக்கமிட்டனர்.இதனால் அவ்வழியாக சாலைப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, வாகனத்தில் அழைத்துச் சென்று, தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பேத்கர் திடலில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நான்குமுனைச் சந்திப்பிற்கு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உங்களுக்கா வந்துச்சா 1ரூபாய்..? அப்போ மகளிர் உரிமைத் தொகை கன்பார்ம்..!