தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டினை அரசுப்பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் வழங்க அரசாணை பிறப்பிக்கக்கோரி அரசுப்பள்ளி மாணவிகள் கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேல திருச்செந்தூர் ஊராட்சி நா.முத்தையாபுரம் பகுதியில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி
மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் அரசுப்பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் 20% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தற்போது தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மாணவிகள் இதனால் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்கள் பள்ளியில் கட்டப்படும் பள்ளிக்கட்டிடம் தரம் இல்லாமல் கட்டுப்படுவதாகவும் , கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டும் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து நா.முத்தையாபுரம் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட கட்டிடம் கட்டிடம் கட்டித்தர கேட்டும் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிக்க : ஓவராக பாசம் பொழியும் அமித் ஷா.. 4,5 மாநிலத்திற்கே இப்படியா..? பகீரங்க கண்டனத்தை பதிவிட்ட அமைச்சர் உதயநிதி..