தமிழக மக்களுக்கு ஓர் குட் நியூஸ்..!!
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சனி, ஞாயிற்று மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் செல்லவுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளை மறுநாள் 200 பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..