அண்ணாவின் புகழ் ஓங்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதுக்குறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
தமிழ்நாடு என பெயர் சூட்டிய தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, பேரறிஞரின் பெயரை தாங்கி நிற்கும் நம் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா – கலைஞர் திருவுருவச்சிலைகளுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்துக்கு, சக அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளுடன் மலர்தூவி மரியாதை செய்தோம். I belong to the Dravidian Stock என முழங்கிய அண்ணாவின் புகழ் ஓங்கட்டும். #HBDAringarAnna
தமிழ்நாடு என பெயர் சூட்டிய தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, பேரறிஞரின் பெயரை தாங்கி நிற்கும் நம் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா – கலைஞர் திருவுருவச்சிலைகளுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்துக்கு, சக அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழக… pic.twitter.com/qmq9gliZbM
— Udhay (@Udhaystalin) September 15, 2023