விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை..! வீட்டிலேயே செய்யலாம்..
விநாயகரே எளிமையானவர். அரச மரத்தின் அடியிலும் ஆற்றங்கரையின் அருகிலும் எழுந்தருளி இருப்பவர். அவருக்கு மேற்கூரைகூடத் தேவையில்லை என்ற ஒரு வரலாறு உண்டு.
அதற்காக தான் “விநாயகரை” எளிமையாக கிடைக்க கூடிய இயற்கைப் பொருள்கள் கொண்டு வழிபடுவது நல்லது. களிமண் மிக எளிதில் கிடைக்கும். களிமண்ணால் ஆன விநாயகரை கொண்டு வழிபாடு செய்து.., நீரில் கரைத்தால் கஷ்டங்கள் கரையும் என்பது ஐதீகம்..
அதுவே ரசாயனங்களால் செய்யப்படும் விநாயகரை நீரில் கரைப்பது ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் களிமண்ணோ மிகவும் எளிதாகக் கரைந்து விடும்.
எனவே களிமண்ணால் செய்யப்படும் விநாயகரை வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்குப் புதிய களிமண் விநாயகரை வாங்கி வழிபடுவது விசேஷம்.
மேலும் காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
பூஜை செய்ய ஏற்ற நேரத்தினை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.
பூஜைகள் செய்யும் பொழுது :-
ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம,
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம,
ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம,
ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம,
ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம,
ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம,
ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய..
இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவது இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.., பூஜையும் முழுமை அடையும்..
என்னும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பழம், வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூரம் காட்டி நம் வேண்டுதலைச் சொல்லிப் பின் விநாயகர் சதுர்த்தி பூஜை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும்
காலை 6.00 முதல் 7.00 மணி வரை
காலை 9.00 மணி முதல் 10 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை
மாலை 7.00 மணி முதல் 9 மணி வரை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..