மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தமிழகத்தில் 90 எம்.எல் எம்.பிக்கள் உருவாக உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இடஒதுக்கீடு மூலம் தமிழகத்தில் 77 எம்.ஏக்கள் மற்றும் 13 லோக்சபா எம்.பிக்களில் மொத்தம் 90 பெண்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த 33% சதவீதத்தில் 10 தொகுதிகள் இருக்குமேயானால் அதில் 4 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டியதாக இருக்கும். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.