தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் 88 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24.09.2023) நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் அவரது திருஉருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் டாக்டர் சதன்திருமலைக்குமார், சாத்தூர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான மறுமலர்ச்சி தி மு கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.