தமிழக முதல்வர் புகைப்படத்தை அவமதித்த விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர்,
பத்திரிக்கை ஊடகத்தில் இமாலய புரட்சி நடத்திய ஆதித்தனார் வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் வாங்கி மதுரையில் பத்திரிக்கையை தொடங்கி சென்னையிலும் பத்திரிக்கையை தொடங்கி இந்தியாவில் அதிக விற்பனை ஆகும் இதழ் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தமிழ் இருக்கும் வரை ஐயா ஆதித்தனார் புகழும் நிலைத்திருக்கும் என் திருமணம் இவரின் தலைமையில் தான் நடந்தது. கர்நாடக காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் புகைப்படத்தை அவமதித்த விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்மிடம் நியாயம் உள்ளது ஒழுங்காற்று குழு வினாடிக்கு 3000 கன அடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியும் கடை அடைப்பு செய்கிறார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள் அது நடக்காது நீதிமன்றம் ஒழுங்காற்று குழு தமிழர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதை தெளிவாக சொல்கிறது. எல்லை மீறி சென்றால் அதற்கு எதிர் விளைவு தானாக தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.