பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏ கே மூர்த்தி ஆகிய இருவர்கள் மீதும் இவர்களின் அடியார்கள் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீசாரிடம் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் கோ . ரவிராஜ் புகார் அளித்துள்ளார்.
இதுக்குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கோ . ரவிராஜ் ,
வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் கோ . ரவிராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் ஏகே மூர்த்தி அவர்கள் தூண்டத்தில் படி தன்னை பாட்டாளி மக்கள் கட்சியின் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சென்னை பெருநகர காவல் ஆணையர் மத்திய சைபர் கிரைம் குற்ற பிரிவில் புகார் மனு அளித்துள்ளதாகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்திலும் சுமார் 40 ஆண்டுகளாக மாநில பொறுப்பில் இருந்ததாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் உள்கட்சி பூசலால் காரணமாக தன்னை கட்சியை விட்டு எந்த ஒரு காரணமும் இன்றி நீக்கிவிட்டனர்.
.மேலும் தான் சொந்தமாக வன்னிய சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தை முறைப்படி பதிவு செய்து தொடங்கி உள்ளதாகவும் ஆதலால் தன்னுடைய சங்கத்தை வளர விடாமல் தடுத்து நிற்கும் முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் ஏ கே மூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் ரவிராஜ் அவர்கள் தெரிவித்தார் மேலும் தன்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மற்றும் கொச்சையான வார்த்தைகளில் பேசி வருவதால் இன்று சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி மற்றும் ஏகே மூர்த்தி அவர்கள் மீதும் கொலை மிரட்டல் விடுத்து வந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பு தெரிவித்தார்.