முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!! இந்த மீட்டிங் இதற்கு தான் அன்புமணி ராமதாஸ் ஓபன் டாக்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க கூடாது, சமூக நீதி பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இது குறித்து முதலமைச்சரும் ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களும் காவிரி நீரை நம்பிதான் உள்ளது எனவும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..