தகுதி இல்லாதவர்கள் ஆலையில் மட்டுமல்ல.. இங்கும் இருக்கிறார்கள் ..!! ஓபிஎஸ்-யை கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடந்து, சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் முன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார்.
பின்னர், அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு “தோழி விடுதி” அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டா வழங்க என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர் நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி அரியலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 10 லட்சம் வழங்குமா என கேள்வி எழுப்பினார்…
மேலும், தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது எனவும் கேள்வி எழுப்பினார்..
அனுபவம் இல்லாத தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் இப்படி விபத்து தான் ஏற்படும் என ஓ.பன்னீர்செல்வம் பேச,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை அவர்களின் குடும்பத்திற்கு கட்டாயம் போய் சேரும்.., அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி விட்டோம், நீங்கள் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்..,
தகுதி இல்லாத ஆட்கள்.., வேலை செய்கிறேன் என்ற பெயரில் மாவு அரைபவர்கள் ஆலையில் மட்டும் அல்ல, பல இடங்களில் இருக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே.. அது உங்களுக்கே தெரியும் என பதில் அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதற்கிடையே, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..