இவங்க காம்போ வந்தாலே படம் ஹிட் தான்..!! அதுக்கு இதான் காரணம் ..!!
தமிழ் திரை உலகில் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் “நடிகர் விஜய்” இவர் நடித்த படம் எதுவாக இருந்தாலும் சரி அதை காண்பதற்கு ரசிகர்கள் மாத கணக்கில் காத்திருப்பார்கள். படம் வெளியாகும் நாளில் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வலியும்.
ஆட்டம், பாட்டம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். தற்போது வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார், முன்னதாக இருவரும் இணைந்து நடித்த கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களும் கொடுத்திருக்கிறது, அந்த வகையில் “லியோ” வெற்றி தருமா என்பதை படம் வெளியான பின் தான் பார்க்கலாம்..
இவர்களின் காம்போ வெற்றி பெற ஒரே ஒரு ரகசியம் “ரசிகர்கள்” விஜய் மற்றும் திரிஷாவின் எதார்த்த நடிப்பு.., நகைச்சுவை பேச்சுக்கள் ரசிகர்களை எதிர் பார்க்க வைத்தது.., மீண்டும் இவர்களின் காம்போ இணையுமா.., என எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு லியோ ஒரு ட்ரீட் ஆக இருக்கும்..
-சரஸ்வதி