ராசிபுரம் அருகே தொடக்க பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் வேஷ்டி ஒன்றிற்கு 5 ரூபாய் லஞ்சம் கேட்டு 3000 லஞ்சம் பெற்ற மேலாளர் பிரகாஷ் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் தொடக்கப்பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கமானது செயல்பட்டு வருகிறது.சங்கத்தில் 250க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ள நிலையில் சங்கத்திற்கு மேலாளர் பொறுப்பு பதவியில் பிரகாஷ்(32) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நூல் அதாவது வேஷ்டி தயாரிப்பதற்கான நூல்(வார்ப் பிம்) வழங்கப்பட்டு வருகிறது. 1 நூல் மூலம் 200 வேஷ்டிகள் தயாரிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் லோகநாதன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் மூலம் 13 நூல்களை வாங்கியுள்ளார். இதற்கு வேஷ்டி ஒன்றிற்கு 5 ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு லோகநாதன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து 13 நூல்களை (வார்ப் பிம்) பிரகாஷ் லோகநாதனிடம் வழங்கி உள்ளார். 13 நூல்களுக்கு 2600 வேஷ்டிகள் வரும் நிலையில் அதற்கு லஞ்சமாக 13,000 கேட்பதாக லோகநாதன் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு பிரகாஷ் மீது லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்துள்ளார்.புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தலின்படி முதற்கட்டமாக ரசாயனம் தடவிய 3000 ரூபாய் பணத்தை லோகநாதனிடம் அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக 3000 ரூபாய் பணத்தை பிரகாஷிடம் லோகநாதன் ஒப்படைக்க சென்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் காலுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 5 மணி நேர விசாரணையில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் வேஷ்டி ஒவ்வொன்றிற்கும் 5ரூபாய் பணம் கேட்டது தெரியவந்தது இந்த நிலையில் விசாரணையில் 49000 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி மேலாளர் பொறுப்பு பிரகாஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேஷ்டி ஒன்றிற்கு 5ரூபாய் லஞ்சம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…