பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி இவங்க ஆட்சியா..?
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றிரவு சென்னை வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
பிரியங்கா காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு பேச்சு குறித்தும் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது..
பாஜக ஆட்சி :
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் உரிமை மாநாடு மற்றும் மகளிர் உரிமை திட்டம் என்ற வாசகத்துடன் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புகைப்படதுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார் .
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களின் குரலை மையப்படுத்தக்கூடிய விதமாக மகளிர் உரிமை மாநாடு அமையவுள்ளதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..