சைக்கிள் கேப்பில் பாஜகாவை பற்றி ரீல் விட்ட அண்ணாமலை..!!
கழிவுநீர் அகற்றும் பணியின் போது துப்புரவு தொழிலாளர்கள் மரணம் அடைவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.., இதனால் மரணம் அடைபவர்களின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தரவேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.., அந்த உத்தரவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.., இந்த உத்தரவு மிகவும் வரவேற்க கூடியது என போஸ்ட் செய்துள்ளார்..
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது என்பது மிகவும் மோசமான ஒன்று அப்படி அந்த தூய்மை பணியை செய்யும் பொழுது கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி செயல்படும் பொழுது பல விதமான மரணங்கள் ஏற்படுகிறது..
இதை தடுத்த நிறுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.. மு.க.ஸ்டாலின் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு தல 30லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என வாக்குரிதி கொடுத்தார்.., ஆனால் அந்த சிந்தனையை செயல்பட நினைத்தவர் பாரத பிரதமர் மோடி..
கழிவுநீர் அகற்றும் பணியின் போது மரணம் நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு தலா 30லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.., உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் 20லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது..
இந்த உத்தரவு வெளியான சில நொடியிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.., தமிழ்நாட்டின் சார்பாக இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.. இந்த வாக்குறுதியை என்னதான் திமுக கொடுத்திருந்தாலும் அதை நிறைவேற்றியது பாரத பிரதமர் மோடி என்பதை நாங்கள் பெருமையாக சொல்வோம் என குறிப்பிட்டுள்ளார்..
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் மோடி” தலைமையிலான மத்திய அரசு, கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்விற்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட மற்றும் தகுதியுள்ள 58,098 தொழிலாளர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 40,000 மற்றும் அடையாளம் காணப்பட்ட 1935 தொழிலாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான திட்டம் மூலம் மானியமாக 5,00,000 ரூபாய் வழங்கியுள்ளது.
மேலும், 22,294 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக 2000 ரூபாய் உடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகையுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்பட உள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..