ஒருத்தன் வெளிச்சத்துக்கு வர இவங்க இப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்களா..? குட்டி ஸ்டோரி-21
மாலை நேரத்தில் அதிக இருள் சூழ்ந்து இருக்குனு ஒருத்தர் என்ன பண்றாரு.., மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கிறார்.., அப்போ பலத்த காற்று வீசுறதுனால அந்த மெழுகுவர்த்தி அணைஞ்சி போயிடுது..
அப்போ அந்த வீட்டு ஓனர் என்ன பண்றாரு.., ச்சே இந்த மெழுகுவர்த்திக்கு அணையுறாதே வேலையா போச்சு.., அப்படினு திட்டிட்டே மெழுகுவர்த்தி ஏத்துறாரு..
அப்போ அங்க இருந்த தீக்குச்சி அந்த மெழுகுவர்த்தி கிட்ட கேட்டுச்சாம்.., காத்து வீசுனா நீ என்ன பண்ணுவ பாரு உன்ன திட்டிட்டு போறாரு.., உன்ன திட்டுறவங்க வாழ்க்கையே ஏன் பிரகாசமா வெச்சு இருக்க.., நீ அவங்கள வெளிச்சத்துல வெச்சி அழகு பாக்கதா.., நீ உருகி அவங்கள வெளிச்சத்துல வெக்குற ஆனா அது அவங்களுக்கு புரியல உன்ன தான திட்டுறாங்க அப்படினு தீக்குச்சி கேட்டுச்சு..
அதுக்கு மெழுகுவர்த்தி சொல்லுச்சாம்.., என் கடமையே மத்தவங்கள வெளிச்சத்துல வெச்சி அழகு பாக்குறது தான்.., என்ன மத்தவங்க திட்டுவது சகஜமான ஒன்னு.., நானு உருகுறதுனால அவங்க வாழ்க்கையில வெளிச்சம் கிடைக்குற அப்போ அதை நான் எப்படி நிறுத்த முடியும்.. அப்படினு சொல்லுச்சாம்..
அதுமாதிரி தான் ஆசிரியர்கள்.., நம்ப வாழ்க்கையில பிரகாசிக்க ஆசிரியர்கள் அவங்கள உருக்கி நமக்கு நல்ல விஷயத்தை சொல்லி கொடுக்குறாங்க.., நம்ப அவங்கள கமெண்ட் செய்யுறோம்.., சில சமையம் எதிர்த்து பேசுறோம்.., அதுக்கு அவங்க கோவப்பட்டு நமக்கு நல்ல விஷயத்தை சொல்லி கொடுப்பதை நிறுத்துவது இல்லை..
இப்படி, நம்ப வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரணம்னு கஷ்ட படுற ஆசிரியர்களுக்கு கோவில் கட்டலானாலும்.., அவர்கள் மனதை புண் படுத்தாமல் இருந்தாலே போதும்.., நாம் அவர்களுக்கும் செய்யும் மிக பெரிய நன்றியே.., நம் வாழ்வில் முன்னேறி காட்டுவது மட்டுமே..
தன் மாணவனை முன்னேற்றி பார்க்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்.., இந்த குட்டி ஸ்டோரி சமர்ப்பணம்..
இதையும் படிக்க மறக்காதீங்க : கடைசி நிமிடத்தில் கூட வாழ்க்கை மாறும்..!! குட்டி ஸ்டோரி – 20
-வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..