உங்க ஊருல கொஞ்சம் ஆட்டம் போடலாமா..? ரெயின் அலர்ட்
தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கடந்த 19-ஆம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்நிலையில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது தென்மேற்கு அரபிக் கடலில் “தேஜ் புயல்” உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 25-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் 23, 24, 25ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..