கல் நெஞ்சம் கொண்ட மகன்கள்..!! கண்ணீர் மல்க தாய் கொடுத்த புகார்..!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!!
பெற்ற பிள்ளைகளே தாயின் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு ஏமாற்றி நடுரோட்டில் விட்டு சென்றுள்ளனர்.., பரிதவித்த தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்ணீர் மல்க புகார்..
பெற்றோர்களை வயதான காலத்தில் பார்க்க மறுத்த மகன்கள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள். சிறுவயதில் கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோரை கடைசி காலத்தில் கஷ்டத்தை மட்டுமே கொடுத்து விட்டு செல்கின்றனர்..
சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு பெற்ற தாயை ஏமாற்றுவது அதிகமாக நடக்கிறது. உழைக்கும் காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து.., வருங்காலத்தில் கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படும் ஜீவன்கள் அம்மா அப்பா மட்டுமே..
உழைத்த பணத்தை பிள்ளைகளுக்கே சேர்த்து விட்டு வருங்காலத்தில் அவர்கள் கொடுக்கும் பணத்திற்காகவும், ஒரு வேளை உணவிற்காவும் கையேந்தும் நிலையில் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் எடுத்துக் கொள்ளும் பிள்ளைகள் அவர்களை புறக்கணிப்பது உண்மையில் வேதனையான கொடுக்க கூடிய விஷயம்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா வயது 65 வயதான புஷ்பா.., சிறு வயதிலேயே கணவரை இழந்துள்ளார்.., இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.., ஒரு மகளும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களுக்கு கல்யாணம் ஆன நிலையில், பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..
இந்நிலையில், இருமகன்களும் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என சொல்லி அம்மாவிற்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை தங்கள் பெயருக்கு ஏமாற்றி எழுதி வாங்கியிருக்கிறார்கள். அதன் பின் இரண்டு மகன்களும் தாய், மற்றும் சகோதரியை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்..
இதில் அதிர்ச்சி அடைந்த புஷ்பம் தன் மகன்கள் தங்களை ஏமாற்றி விட்டனர். மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வைத்திருந்த 20 சென்ட் நிலத்தை ஏமாற்றி வாங்கி கொண்டனர் அதை எப்படியாவது மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கன்னியாகுமரி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்..
அப்போது அந்த ஈவு இரக்கம் இல்லாத இருமகன்களும் வயதான புஷ்பத்தை நடுரோட்டில் போட்டு அடித்து உதைத்துள்ளனர்.., சுற்றியிருந்தவர்கள் அங்கு வந்து அவர்களை விலகிவிட்டனர்.., புஷ்பமின் கண்ணீரும் அவரின் கோரிக்கையும் காண்போரின் கண்ணில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..