கூட்டணி குருமாவே முடியல.. அதுக்குள்ள பிளான் பி(B)யா..?
அதிமுக ஒன்றும் பாஜகவின் பி(B) டீம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சேலம், ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக – பாஜக கூட்டணி பற்றி உரையாற்றினார்.
அப்போது, தங்கள் கொள்கையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத கட்சி என்றால் அது அதிமுக தான் என்றும், கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைந்தது என்றும், ஆனால் அதற்காக கொள்கையை விட்டு கொடுக்கவில்லை எனவும் கூறினார்.
பாஜக கூட்டணியை நாம் முறித்துக்கொண்ட பிறகு திமுகவுக்கு பயம் வந்துவிட்டதாக தெரிவித்த அவர், தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், திமுகவினர் மக்களை ஏமாற்றவே, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்து உள்ளதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..